திராவிட மாடல் என்பது ஓல்டு அம்பாசிடர் கார் எனவும், அதை காயலான் கடையில்தான் போட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்தார். ஈரோடு குமலன்குட்டை பகுதியில் நடைபெற்ற கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியின் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், பெரியார் ஒரு ஊசிப்போன வெங்காயம் என விமர்சித்தார்.