திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வெளியேறி வருகிறது. கொடுமுடியில் இருந்து காங்கேயம், தாராபுரம், சென்னிமலைக்கு செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது. இது தொடர்பான தகவல் அளித்தும் நகராட்சி அதிகாரிகள் சீரமைக்காமல் அலட்சியமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.