தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் நோய் தாக்குதலால் அவரைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள அவரைக்காய் செடிகளில் மஞ்சள் மற்றும் செம்புள்ளி நோய் தாக்கியுள்ளது. அவரைக்காய் கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், நோய் தாக்குதல் காரணமாக விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.