விழுப்புரம் - புதுச்சேரி சாலை அருகே குடியிருப்புகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீர், ஒரு வாரமாகியும் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஃபெஞ்சல் புயல் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கின. இந்நிலையில் பாலாஜி நகர், லிங்கம் நகர், நேதாஜி நகர், கணபதி நகர் உள்ளிட்ட பகுதியில் தற்போது வரை முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத சூழல் உள்ளதோடு, தேங்கியுள்ள நீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.