கொடைக்கானல் கீழானவயல் கிராமத்தில் மழை, வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட சாலை தற்போது வரை சீரமைக்கப்படாததால், உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவரை தூக்கி கொண்டு உறவினர்கள், உடைப்பு ஏற்பட்ட பகுதியை சிரமத்துடன் கடந்து சென்றனர். தொடர் கனமழையால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புலி பிடித்த ஓடை நீர்தேக்கத்தின் கரை உடைந்து தண்ணீர் வெளியேறியதில் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் கீழானவயல் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளது.