நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பேரூராட்சி சார்பாக புதிதாக கட்டப்பட்டு வரும் சந்தை கட்டட பணிகளை அமைச்சர் நேரு, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது,மொத்தமுள்ள 135 கடைகளுக்கும் ஏலத்தில் புது வாடகைதாரர்களுக்கு வாடகை தொகையை அனுசரித்து கொடுக்குமாறு சபாநாயகர் அப்பாவு செயல் அலுவலரிடம் கேட்டுக் கொண்டார். உடனிருந்த அமைச்சர் நேரு, பேரூராட்சி தலைவியிடம் வள்ளியூரை நகராட்சியாக மாற்றி விடுவோமா? என கலகலப்பாக பேசி சென்றார்..