கடையநல்லூர் அருகே சுமார் 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினரை பொது மக்கள் பாராட்டினர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடையநல்லூர் அடுத்துள்ள துரைச்சாமிபுரம் மேற்கு பகுதியில் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில் சுமார் 8 அடி நீளம் உள்ள ஒரு மலைப்பாம்பு கிடந்தது. இதனால், அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக கடையநல்லூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கடையநல்லூர் தீயணைப்புத் துறையினர் அந்த மலைப்பாம்பை நீண்ட போராட்டத்திற்கு பிறகு லாவகமாக பிடித்தனர். இந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் வனத்துறையினர் வனப்பகுதியில் பத்திரமாக அதனைக் கொண்டு விட்டனர். சுமார் எட்டு அடி நீளம் உள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்புத்துறையினரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.