சென்னை ஆலந்தூரில் பள்ளியில் எலெக்ட்ரிக்கல் வேலை செய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் உடலை, மருத்துவமனையில் இருந்து பள்ளிக்கு எடுத்து சென்றதால் மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். அரசு உதவி பெறும் ஏ.ஜி.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எலெக்ட்ரீசியனாக பணிபுரிந்த ஆலந்தூரை சேர்ந்த ஜார்ஜ், ஸ்பீக்கர் வயரை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். சக பணியாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, உயிரிழந்த ஜார்ஜின் உடலை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு சென்ற அவரது உறவினர்கள், தலைமை ஆசிரியரையும் தாக்க முற்பட்ட நிலையில், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.