ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மின் இணைப்பை மாற்றி கொடுக்க 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர் மேனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். ஃபோர் மேன் கிருஷ்ணன் கையும் களவுமாக சிக்கிய நிலையில், மின்வாரிய அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட போது கணக்கில் வராத 17 ஆயிரத்து 640 ரூபாய் சிக்கியது.