குழந்தைகள் கையில் செல்போனை கொடுக்காமல் அவர்களை மனம் போல் விளையாட வையுங்கள் என பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட குக்வித் கோமாளி புகழ் எமோஷனலாக பேசியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் தனியார் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய புகழ், குழந்தைகள் கையில் செல்போனை கொடுக்காமல், அவர்களை வெளியே விளையாட வைத்து அதற்குப்பின் படிக்க வையுங்கள். அவர்களே நன்கு படிப்பார்கள் என எமோஷனலாக பேசியுள்ளார். பின்னர் பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கிய புகழுடன், குழந்தைகள் ஏராளமானோர் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.