டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் 2025 ஏப்ரல் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதுகுறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 16 மாவட்டங்களில் திட்டம் செயல்படுவதாகவும், இதன் மூலம் 45 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.