புதுக்கோட்டையில், பாஜக மற்றும் அதிமுக பிரமுகர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் மேற்கொண்ட சோதனை 11 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது. புதுக்கோட்டையில் உள்ள பாஜக மாவட்ட பொருளாளராக இருக்கும் முருகானந்தத்தின் வீடு, அவரது சொந்த ஊரான கடுக்காக்காட்டில் உள்ள மற்றொரு வீடு மற்றும் அவரது தம்பியும் அதிமுக பிரமுகரான பழனிவேலின் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.