நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹோட்டல் முன்பு கார் நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அதன் உரிமையாளர், கார் ஓட்டுநரை அடித்து மண்டையை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு பகுதியை சேர்ந்த அருண், தனது காரை பர்லியாரில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டல் முன்பு நிறுத்திய நிலையில், தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி உணவக உரிமையாளர் வாக்குவாதம் செய்தார்.