எக்ஸ்சேஞ்ச் கார்களை விற்பனைக்கு தர மறுத்ததாக கூறி, நெல்லை ஹூண்டாய் கார் ஷோரூமில் பழைய கார் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் புகுந்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை உடைத்து தகராறில் ஈடுபட்டதன் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வண்ணாரப்பேட்டை புறவழிச்சாலை பகுதியில் அமைந்துள்ள ஹூண்டாய் ஷோரூமுக்கு வரும் எக்ஸ்சேஞ்ச் கார்களை, மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த ராபின்சன் என்பவர் வாங்கி விற்று வந்த நிலையில், இருதரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஷோரூமில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட ராபின்சனை போலீசார் கைது செய்தனர்.