ராணிப்பேட்டையில் அமைய உள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. முதல் கட்டமாக 914 கோடி மதிப்பீட்டில் 190 ஹெக்டேர் பரப்பளவில் தொழிற்சாலை அமைய உள்ள நிலையில், அதன் மூலம் 1650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.