கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திரளான பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். திமுக சார்பில் மகாலிங்கபுரம் சர்க்கஸ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு பொங்கல் வைத்தனர். பிறகு, வழுக்குமரம் ஏறுதல், உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன.