ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கி உள்ளது. பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள அங்கு, மொத்தமாக 53 வாக்குப்பதிவு மையங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இடைத்தேர்தலுக்காக 852 பேலட் யூனிட், 285 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 308 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவற்றில் வேட்பாளர் பெயரும் சின்னங்களும் பொருத்தும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணி அடுத்த 3 நாட்களுக்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.