கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான எரியில் அனுமதியின்றி இன்று ஜேசிபி இயந்திரம் மற்றும் டிப்பர் லாரிகள் மூலம் மண் அள்ளப்பட்டு வந்தது. இது பற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் ஏரியில் குவிந்து ஏரி மண் அனுமதியின்றி எடுக்கக் கூடாது என கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது ஏரியில் அதிகளவு ஆழம் எடுக்கப்படுவதாக கூறி அங்கு இருந்த லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மண் அல்ல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டிப்பர் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் அங்கிருந்து ஓட்டுநர்கள் எடுத்து சென்றனர் அதன் பின்னர் கிராம மக்கள் இங்கிருந்து கலைந்து சென்றனர். Related Link மதுபோதையில் கண்ணாடி பாட்டிலில் பெட்ரோல் கேட்டு தகராறு