சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் (திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி) கடை செயல்பட்டு வருகிறது இந்த பிரியாணி கடையில் காலாவதியான இறைச்சிகள் மற்றும் கெட்டுப்போன இறைச்சிகள் கொண்டு உணவு பொருட்கள் தயாரிப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சேலம் மாவட்ட உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிக்கன் மற்றும் மட்டன் இறைச்சிகள் ஆய்வு செய்த பொழுது அதில் காலாவதி ஆகி இருந்தது மேலும் கெட்டுப் போன இறைச்சிகள் என மொத்தமாக 10 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கீழே கொட்டி அழித்தனர் தொடர்ந்து உணவு மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அதிகாரிகள் தனியார் பிரியாணி கடைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளனர் இந்த சம்பவம் பிரியாணி பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Related Link அறுவடை நடந்த வயலில் இருந்த மலைப்பாம்பு