திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கார் சர்வீஸ் ஸ்டேஷனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் பொருட்கள் எரிந்து சேதமாகின. மூலச்சத்திரம் பகுதியில் ரூபன் என்பவர் கார் மற்றும் பைக் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் நடத்தி வரும் நிலையில், நள்ளிரவு கடையில் தீ பற்றியது. தீ மளமளவெள அங்கிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில் ரியாஸ் என்பவர் படுகாயமடைந்த நிலையில், கடைக்குள் சட்டவிரோதமாக ஜெலட்டின் வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.