சிவகங்கை மாவட்டம் கீழடி திறந்த வெளி அருங்காட்சியத்திற்கு நிலம் வழங்கிய 16 விவசாயிகளுக்கு 8 கோடியே 20 லட்ச ரூபாய் வழங்குவதற்கான அரசு ஆணையை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் பெரிய கருப்பன் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன், மத்திய அரசு அகழாய்வு நடத்திய மூன்று இடங்களிலும் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.