நாகை மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தாளடி விவசாய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடைமடை மாவட்டமான நாகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் நீரில் சாய்ந்தன. பல கட்ட போரட்டங்களுக்கு அறுவடை பணிகளை முடித்த கீழ்வேளூர் மற்றும் தேவூர், பட்டமங்கலம், ராதாமங்கலம், கிள்ளுக்குடி, கடலாக்குடி, சாட்டியகுடி, வலிவலம் விவசாயிகள் குறுவை சாகுபடி இழப்பை ஈடுகட்டும் வகையில் தாளடி விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்காக நிலங்கள் டிராக்டர் மூலம் உழவு செய்து நேரடி நெல் விதைப்பு பணி நடைபெற்று வருகிறது.