நாகை மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் 56 சென்டிமீட்டர் மழை பதிவானது. விடிய விடிய பெய்த கனமழை பகலிலும் தொடர்வதால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி விவசாயத்தை நேரடி மற்றும் நடவுமுறையில் மேற்கொண்டனர். இதனிடையே நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நாகை, நாகூர், பாலையூர், திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் இளம் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக தண்ணீர் வடியாமல் இருப்பதால் இளம் பயிர்கள் நீரில் மிதப்பதுடன், அழுகும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.