திரைப்படங்களை மூன்று மொழிகளில் வெளிட்டு லாபம் சம்பாதிக்கும் வியாபாரத்திற்கு மட்டும் மும்மொழிக்கொள்கை தேவையா? என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,மும்மொழி கொள்கை பற்றி விஜய் கருத்து சொல்லக்கூடாது என காட்டமாக தெரிவித்தார்.