கோவை அருகே அரசுப்பள்ளியில் பயின்ற 9ஆம் வகுப்பு மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆங்கில ஆசிரியை, தமிழாசிரியை, அறிவியல் ஆசிரியை ஆகியோர் தன்னை டார்ச்சர் செய்ததாகவும், கன்னத்தில் அறைந்து அசிங்கப்படுத்தியதாகவும் மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், தன் மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பாறைமேடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ரொட்டிக்கடை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.. இந்நிலையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தனது தந்தையும், தாயும் வீட்டில் இல்லாதநேரத்தில் மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். மாணவியின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.கடந்த 10ஆம் தேதி மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில் மாணவி உயிரிழப்பதற்கு முன்பு தனது அத்தையிடம் வாக்குமூலமாக பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.பள்ளியில் பணியாற்றும் தமிழாசிரியை ரமணிபாய், ஆங்கில ஆசிரியை சேர்மா தேவி, அறிவியல் ஆசிரியை ஆகியோர் கடந்த சில நாட்களாகவே தன்னை டார்ச்சர் செய்வதாக கூறி உள்ள மாணவி, தலையை சீவிச்சென்றதற்கு நீ என்ன கிழவியா? தலையை வாரி வழித்து சீவி இருக்கிறாய்? என மற்ற மாணவர்கள் முன்னிலையில் ஆங்கில ஆசிரியை கேட்டு அவமானப்படுத்தியதாகவும், அதைக்கேட்டு மாணவிகள் அனைவரும் சிரித்ததாகவும், அதனால் தனக்கு அசிங்கமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.தான் நன்றாக படிக்கக்கூடிய மாணவி என தெரிந்திருந்தும் ஆங்கில ஆசிரியை தன்னை வேண்டுமென்றே SLOW LEARNERS-னுடன் தன்னை அமர வைத்ததாகவும், அதுகுறித்து கணித ஆசிரியர் தட்டிக்கேட்டபோது என் வகுப்பில் அப்படிதான் அமர வைப்பேன் எனக்கூறியதாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்த மாணவி, உனக்கு இன்னும் காய்ச்சல் வரவில்லையா? விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வருகிறாய்? என மட்டம்தட்டி பேசியதாகவும் கூறினார்.தமிழ் ஆசிரியை ரமணிபாய், தான் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக தன்னை முட்டிபோட வைத்ததாகவும், எக்ஸாம் பேடை தூக்கி வீசி தனது கன்னத்திலேயே அறைந்ததாகவும் கூறி இருந்த மாணவி, தான் நன்றாக படிக்கவில்லை எனக்கூறிய அறிவியல் ஆசிரியை தன்னைபற்றி பேரன்ட்ஸ் மீட்டிங்கில் தனது தாயிடம் கூறுவதாக, மிரட்டியதாகவும் தெரிவித்தார்.இதேகுற்றச்சாட்டுகளையே முன்வைத்த மாணவியின் தந்தை, தனது மகளுக்கு நடந்த டார்ச்சர் குறித்து தான் பள்ளிக்கு சென்று நியாயம் கேட்டபிறகுதான் மாணவியை மேலும் டார்ச்சர் செய்ததாகவும், உன் அப்பாவிடம் சொல்வாயா? எனக்கேட்டு கார்னர் செய்ததாகவும் புகார் தெரிவித்தார்.பழைய மாணவிகளிடம் கேட்டாலும் ஆங்கில ஆசிரியை மற்றும் தமிழாசிரியை குறித்து இதே புகாரைதான் சொல்வார்கள் எனக் கூறிய மாணவியின் தந்தை, தனது மகளுக்கு நடந்ததுபோன்று வேறு எந்த மாணவிக்கும் நடக்கக்கூடாது எனவும் தெரிவித்தார். இதுஒருபுறமிருக்க, ஆசிரியர்கள் கண்டிப்பதையோ அல்லது அறிவுரை கூறுவதையோ பக்குவமாக ஏற்றுக்கொள்ளும்வகையில் மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்றும் அதேநேரம் ஆசிரியர்களும் சரியான முறையில் மாணவர்களை கையாள வேண்டும் எனவும் கூறி வரும் மக்கள், சின்ன சின்ன விஷயங்களைகூட சீரியஸாக எடுத்துக் கொண்டு மாணவ-மாணவிகள் தற்கொலை முடிவை கையில் எடுப்பது சரியான தீர்வல்ல எனவும் கூறி வருகின்றனர். இதையும் பாருங்கள் - வன்கொடுமை செய்து சிறுமி கொ*ல, கனமழையால் வெளியே தெரிந்த 'சடலம்' | CrimeNews | LatestNews