சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 85 லட்சம் ரூபாய் நிதி உதவியை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். சென்னையில் வரும் 12 முதல் 19 ஆம் தேதி வரை 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் நடைபெறவிருக்கும் இந்த விழாவுக்கு 85 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.