நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வீட்டில் மாவு அரைக்கும் கிரைண்டர் தீப்பிடித்து எரிந்ததில் வீட்டில் உள்ள பொருட்கள் தீக்கிரையாயின. அம்பலவாணபுரத்தை சேர்ந்த அபிநவ் என்பவரின் வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்த போது, மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. அப்போது, வீட்டிலிருந்த பொருட்களிலும் தீப்பிடித்து எரியவே, வீடு முழுக்க புகை சூழ்ந்த நிலையில் நீரை ஊற்றி தீ அணைக்கப்பட்டது.