சென்னை வேளச்சேரியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது சாலையை மறைத்து பட்டாசு வெடித்ததால் அப்பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேளச்சேரி முன்னாள் எம்எல்ஏ அசோகனை வரவேற்க பிரதான சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.