ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சந்தனமரத்தை வெட்ட வந்தவரை துப்பாக்கியால் சுட்டுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்பாளையம் பகுதியில் மோகன்லால் என்பவரது தோட்டத்தில் இருந்த சந்தன மரங்களை 29 ஆம் தேதி இரவு மர்ம கும்பல் வெட்ட வந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த மோகன்லால் தான் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை கொண்டு சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.