தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே குரும்பூர் புனித கண்பிரகாசியாள் ஆலய திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பங்குத்தந்தை ராஜேஷ் தலைமையில், பங்குத்தந்தை பபிஷ்டன் கொடியை புனிதப்படுத்தி ஆசிர்வதித்து கொடியேற்றி திருப்பலியை நடத்தினார். இதில் பங்குத்தந்தை உபட்டஸ் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.