விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள சேலம் RR பிரியாணி கடையில் பழைய இறைச்சி உள்ளிட்ட 18 கிலோ உணவு பொருட்களை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், உரிய அனுமதியின்றி எ.இராமலிங்கபுரம் கோழி பண்ணையில் செயல்பட்டு வந்த பிரியாணி தயாரிப்பு கூடத்தின் செயல்பாடுகளையும் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பான புகைப்படங்களை மீடியாக்களுக்கு வெளியிட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மாரியப்பனும், பிரியாணி கடை நிர்வாகிகளும் கடையின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என செய்தியாளர்களை எச்சரித்தார்.