கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சுமார் 40 ஆண்டுகளாக, இலவச வீட்டு மனை பட்டா இல்லாமலும் சாலை வசதியின்றியும் தவிக்கும் மக்களுக்கு தமிழக அரசு உதவுமாறு கோரிக்கை எழுந்துள்ளது. அங்குச்செட்டிபாளையம் புது நகரில் வசிக்கும் மக்களுக்கு சாலை வசதிகள் இல்லாததால், மழைக்காலங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக வேதனைத் தெரிவித்தனர். குடியிருப்பை சுற்றி சேரும் சகதியுமாக உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே அரசு அதிகாரிகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்