பெரம்பலூர் மாவட்டம் திம்மூர் கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக 4 ஏக்கரில் வாழை மரம் முறிந்து சேதமானதால் விவசாயி வேதனை அடைந்துள்ளார். நொச்சிகுளம், ராமலிங்கபுரம், மேத்தாள், திம்மூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் திம்மூர் கிராமத்தில் விவசாயி முத்துசாமி என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் அவருக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.