நலிவுற்ற நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்றனர். முன்னதாக, செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரிலிருந்து புறப்பட்டவர்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தெருக்கூத்தில் இடம்பெறும் வேடங்கள் அணிந்தும், கரகாட்டம், நையாண்டி மேளம் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் செய்தவாறும் ஊர்வலமாக நிகழ்ச்சி நடைபெறும் திருமண மண்டபத்தை வந்தடைந்தனர்.