செங்கல்பட்டு அருகே கூட்ட நெரிசல் காரணமாக வேட்டி, சேலைகளை வழங்காமல் அதிமுகவினரே மூட்டை கட்டி எடுத்துச் சென்றனர். MGR பிறந்தநாளை முன்னிட்டு, அச்சரப்பாக்கம் அருகே உள்ள ஒரத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களுக்கு வேட்டியும், சேலையும் வழங்குவதற்காக டோக்கன் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், வேட்டி, சேலை வாங்க ஏராளமானோர் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.