புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக இரண்டு வயது குழந்தையை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த திலோத்தமா என்ற பெண்ணுக்கு திருமணத்தை கடந்த உறவு இருந்ததால் வீட்டில் பிரச்னை எழுந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆத்திரத்தில் தனது இரண்டு வயது பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தும், 10 மாத ஆண்குழந்தையை விற்றதாகவும் தெரியவந்துள்ளது.