திருச்சியில் இருந்து மதுரை வரை சமத்துவ நடைபயணத்தை தொடங்கினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தி, கொடி அசைத்து தொடங்கி வைத்தார்தமிழ்நாட்டில் சாதி, மத மோதலைத் தூண்டும் செயல்களுக்கு இரையாகாமல் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமத்துவ நடைபயணம்இளைஞர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 12ஆம் தேதி வரை நடைபயணம் செல்கிறார் வைகோமத்திய, மாநில அரசுகள் இணைந்து தான் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க முடியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை போதைப் பொருள் நெட்வொர்க்கை முற்றிலும் அழிப்பதுடன், அதன் நுழைவு வாயிலையும் அடைக்க வேண்டும் எனவும் பேச்சு அன்பு செய்வதற்குப் பதிலாக வம்பு செய்வதற்காக ஆன்மீகம் பயன்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் நாட்டில் அச்சத்துடன் வாழும் சூழலை உருவாக்கி இருப்பதாகவும் புகார்நடைபயணத்தை விட வைகோவின் உடல்நிலை தனக்கு மிகவும் முக்கியம் என முதலமைச்சர் உருக்கம் இனி, நடைபயணம் மேற்கொள்ள வேண்டாம் என உரிமையுடன் கேட்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேச்சு