கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அன்னூரில் பழமை வாய்ந்த மண்ணீவரர் கோயிலில் 25 ஆம் ஆண்டு திருத்தேரோட்டத்தையொட்டி கம்பத்து ஆட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. வள்ளிகும்மி ஆட்டத்தின் அடுத்த நகர்வாக பிரபலமடைந்து வரும் கம்பத்து ஆட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கிராமிய பாடல்களுக்கு நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.