தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய மாணவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை ஓட்டேரியை சேர்ந்த மாணவர் தர்ஷன், டெல்லியில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.