திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற தங்க தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாத செவ்வாய்கிழமையை முன்னிட்டு தங்க தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் தங்க தேரில் மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி காட்சியளித்தார்.