தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதிக்குட்பட்ட மருதிப்பட்டி கிராமத்தில் டாக்டர். அண்ணல் அம்பேத்கார் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். மருதிப்பட்டி சுற்றியுள்ள M.பள்ளிப்பட்டி. M. வெளாம்பட்டி. சுண்டாக்காப்பட்டி. மருதிப்பட்டி புதூர். கூச்சனூர், கல்லடிப்பட்டி. மோட்டூர். மூங்கில் பட்டி. போன்ற கிராமத்திலிருந்து மருதிப்பட்டி பள்ளியில் பயின்று வருகின்ற வருகின்றனர். இம்மாணவர்களுக்கு பள்ளியின் அருகில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் தங்கி பள்ளி பயின்று வந்தனர் ஆனால் கடந்த 1- ஆண்டுக்கு மேலாக விடுதியின் மேற்கூரை ஆங்காங்கே கீழே விழுவதுமாக இருந்தது. மாணவர்களுக்கு போதிய தங்கும் வசதி இல்லாதாதால் மாணவர்களை பள்ளியின் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள அவலநிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் நலன் கருதி மாணவர்கள் விடுதியை புதுபிக்க வேண்டும் என கடந்த 3- ஆண்டிற்கு மேலாக மருதிப்பட்டி கிராமத்தின் மாவட்ட நிர்வாகதினரிடமும் ஆதிதிராவிடர் நலத்துறையினரிடம் மனு அளித்து வந்தனர். ஆனால் இன்று வரை விடுதி புதுபிக்கவோ (அ) புதிய கட்டிடம் கட்டிதரவோ இல்லை . இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி மாணவர்கள் நலன் கருதி விடுதியை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையோ (அ) மாவட்ட நிர்வாகமோ நிதி ஒதுக்கி விடுதி புதுபிக்க வேண்டும் (அ) புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர். Related Link 40 வருடங்களாக இருந்த கட்டிடம் இடித்து அகற்றம்