மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து பழனி செல்லும் பேருந்தை ஓட்டுனர் சுப்புராஜ் இயக்கி வந்தார் நிலையில் சுமார் 55 பயணிகளுடன் பழனி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தானது மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்ட புலி நகர் பகுதியில் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தின் பின்பக்க டயர் மோசமாக இருந்ததன் காரணத்தால் திடீரென பின்பக்க டயர்கள் வெடித்தது. இதனால் பேருந்து நிலை தடுமாறும் போது பேருந்து ஓட்டுநர் பிரேக் அடிக்கவே பேருந்து நிலை தடுமாறி இடது புறமாக சாலையின் பக்கவாட்டின் மோதி சாய்ந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட காயமடைந்த பயணிகளை உடனடியாக அங்கு இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தரமற்ற அரசு பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுவதால் இவ்வாறு விபத்து ஏற்படுவதாக பயணிகள் தெரிவித்து கொண்டு இருந்தனர் அரசு பேருந்து டயர் வெடித்து கவர்ந்த விபத்தை குறித்து சமயநல்லூர் காவல்துறையினர் தற்போது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு பேருந்தில் பின்பக்க டயர் மோசமாக இருந்ததால் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வழியில் டயர் வெடித்து பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதையும் படியுங்கள் : கரூரில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த குப்பை லாரி