செங்கல்பட்டு மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையின் காரணமாக தண்டரை சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய அரசு பேருந்தை மூன்று நாட்களுக்கு பிறகு போக்குவரத்து அதிகாரிகள் கிரேன் உதவியுடன் மீட்டனர். காஞ்சிபுரத்தில் இருந்து மதுராந்தகம் பனிமனைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, தண்டரை சாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியது. இதனையடுத்து, சாலையில் படிப்படியாக வெள்ளம் குறைந்ததையடுத்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் இரண்டு கிரேன்கள் உதவியுடன் பேருந்தை மீட்டு எடுத்து சென்றனர்.