திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சை மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளி கட்டிடம் இல்லாமல், மாணவ, மாணவிகள் திறந்த வெளியில் அமர்ந்து கல்வி கற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.