கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அரசு பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட 6 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமடைந்த நிலையில் சத்துணவு பணியாளர்கள் இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஜி.அரியூர் அரசு பள்ளியில் நேற்று மதியம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லியின் வால் இருந்ததாக கூறப்படும் நிலையில், அதனை உட்கொண்ட 6 மாணவர்கள் வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வருவாய் வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் விசாரணையை அடுத்து, கவனக்குறைவாக இருந்த சத்துணவு மேற்பார்வையாளர் மற்றும் சமையலர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.