சென்னை புழல் சிறையில் செல்போன், கஞ்சா கைப்பற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தெரிவித்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, சிறையில் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்கவும் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.