76ஆவது குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராணுவ தென்னிந்திய பகுதி தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு, பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.