மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், ஜதி பல்லக்கு நிகழ்வை தொடங்கி வைத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தானும் பல்லக்கை தோளில் சுமந்து சென்றார். இந்நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் பங்கேற்று பல்லக்கு சுமந்தார். பிறகு பாரதியார் நினைவில்லத்திற்கு வந்த ஆளுநர், பாரதியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.