சேலத்தில் 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுத்து காய்கறி கடைகளில் மாற்ற முயன்ற பட்டதாரி இளைஞரை போலீஸார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மடப்பள்ளியைச் சேர்ந்த பிபிஏ பட்டதாரி தினேஷ், சேலம் குரங்குசாவடி பகுதியில் காய்கறி வாங்கிவிட்டு ஜெராக்ஸ் ரூபாய் நோட்டை கொடுத்ததைக் கண்டு, வியாபாரிகள் சேர்ந்து அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.