திருப்பத்தூர் அருகே 4 வருடங்களுக்கு முன்பு உடைந்து விழுந்த தரைப்பாலத்தை சீரமைத்துத் தரவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வை நகர் சின்னையா மேஸ்திரி தோட்டம் பகுதியில் இருந்த தரைப்பாலம், வெள்ளத்தில் சேதமடைந்த நிலையில், முதலமைச்சர் தனிப் பிரிவு வரை புகார் அனுப்பியும் இதுவரை நடவடிக்கை இல்லை என மக்கள் வேதனையுன் கூறுகின்றனர்.